திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 17 ஏப்ரல் 2024 (17:39 IST)

திமுக தோற்றால் எல்லா மகளிர்களுக்கும் ரூ.1000.. வானதி சீனிவாசன்..!

திமுக ஆட்சி தற்போது தகுதி வாய்ந்த மகளிருக்கு மற்றும் ஆயிரம் ரூபாய் கொடுத்து வரும் நிலையில் திமுக தோற்கடிக்கப்பட்டால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று வானதி சீனிவாசன் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்னும் சில நிமிடங்களில் முடிவடைய இருக்கும் நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வானதி சீனிவாசன் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார் 
 
அப்போது பாராளுமன்ற தேர்தலில் திமுக தோற்கடித்தால் தான் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார். திமுக வெற்றி பெற்றால் தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்டும் வழங்கப்படும் இந்த ஆயிரம் ரூபாய் கூட நிறுத்தப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் திமுக தோல்வி அடைந்தால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் ஆயிரம் உரிமை தொகை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார் 
 
இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக தான் ஆட்சிக்கு வரும் என்றும் அப்போது அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார் அவரது இந்த பிரச்சாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran