வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (13:48 IST)

ரூ.1000 உதவித்தொகை பணக்காரர்களுக்கு மட்டும் தான் ஸ்டாலின் கொடுப்பாரு: கஞ்சா கருப்பு பிரச்சாரம்..!

kanja karuppu
மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் பணக்காரர்களுக்கு மட்டும்தான் ஸ்டாலின் கொடுப்பாரு, என்னைப் போன்ற ஏழைகளுக்கு கொடுக்க மாட்டார் என்று அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த நடிகர் கஞ்சா கருப்பு கூறியுள்ளார்.

நடிகர் கஞ்சா கருப்பு ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் முதல்வர் ஸ்டாலின் பணக்காரர்களுக்கும் அவருடைய குடும்பத்திற்கு மட்டும் கொடுப்பார் என்றும் அந்த தொகை எனக்கு கூட கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்

இதன் பிறகு கூட்டத்தில் இருந்தவர்களை பார்த்து ஆயிரம் ரூபாய் யார் யாரெல்லாம் வாங்கினீர்கள் என்று கேட்க ,கூட்டத்தில் இருந்த பலர் நாங்கள் வாங்கவில்லை என்று கூறினர். உடனே நானும் தான் வாங்கவில்லை அந்த பணம் பணக்காரர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும் ஸ்டாலின் பணக்காரர்களுக்கு மட்டும் தான் கொடுப்பார் ஏழைகளுக்கு கொடுக்க மாட்டார் என்று கூறினார்

இந்த தொகுதியில் எம்பியாக இருக்கும் நவாஸ் கனி இதுவரை மக்களை வந்து பார்த்தாரா? இப்போது தேர்தல் வந்திருப்பதால் தான் வந்து கொண்டிருக்கிறார், அவரை திருப்பி அனுப்புங்கள் என்றும் கஞ்சா கருப்பு பேசினார்.

Edited by Siva