1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. adhav arjuna says tn will see vaiko 2.0

இனி வைகோ 2.O!.. தவெகவுக்கு எதிரியே இல்லை!.. ஆதவ் அர்ஜுனா பேச்சு..

adhav arjuna
கடந்த சில தேர்தல்களில் மதிமுக திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வந்தது. ஆனால், 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின் அந்த கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறிவிட்டது. அதோடு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்து திமுகவுக்கு எதிராகவும், தவெக அரசுக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார். மேலும், முதல்வர் விஜயின் தவெக அரசை நாங்கள் பாதுகாப்போம் எனவும் சொல்லி வருகிறார்.

இந்நிலையில்தான் சென்னையில் நடந்த ஏபிஜே அப்துல் கலாம் தேசிய விருது வழங்கும் விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா ‘நான் மாணவராக இருந்த போது வைகோ மற்றும் திருமாவளவன் ஆகிய இருவரின் பேச்சை கேட்டு வளர்ந்தேன். இப்போது அவர்கள் முன்பு நின்று பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஒரு மாணவனாக இன்னும் அமைச்சரான நினைப்பு எனக்கு வரவில்லை. இனிமேல் எல்லோரும் புதிய வைகோவை பார்க்க போகிறோம். வைகோ 2.0-வை பார்க்கப் போகிறோம்.. உங்களுக்கு ஒரு மகன் இல்லை.. இனிமேல் நானும் உங்களுக்கு ஒரு மகன்தான். நாம் தேர்தல்களில் நாம் இணைந்து 65 சதவீத வெற்றி பெறுவோம்.. இனிமேல் எதிரிகள் இல்லை.. இப்போது சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதிரிகள் இல்லை.. அதனால்தான் கொளத்தூரில் முடிவு கட்டி விட்டோம்’ என அவர் பேசினார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
இன்ஸ்டாகிராமில் பழக்கம்!.. கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் எரித்துக்கொலை!..