தொடர்புடைய செய்திகள்
- பானிபூரியில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருள்! உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!
- புற்றுநோயால் சாகக்கிடந்த நபர்.. லாட்டரியில் அடித்த 10 ஆயிரம் கோடி! – அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்திய லக்கிமேன்!
- புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன?
- இங்கிலாந்து ராஜபரம்பரையில் நடக்கப் போகும் அந்த சம்பவம்! 600 ஆண்டுகள் முன்பே கணித்த நாஸ்ட்ரடாமஸ்!?
- இளவரசி கேட் மிடில்டனுக்கு புற்றுநோய்..! அதிர்ச்சி தகவல்..!!
பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!
பானி பூரி சாப்பிட்டால் புற்றுநோய் உள்பட சில நோய்கள் வர வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறப்பட்ட நிலையில் அதிரடியாக தமிழகத்தில் உள்ள அனைத்து பானிபூரி கடைகளிலும் சோதனை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
கர்நாடக மாநிலத்தில் சாலையோரம் உள்ள பானிபூரி கடைகளில் அம்மாநிலத்தின் உணவு பாதுகாப்பு துறை அதிரடியாக சோதனை நடத்தியதில் பானிபூரியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் குறிப்பாக புற்றுநோயை உருவாக்கும் என்றும் அத்தகைய கெமிக்கல்கள் அதிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
இதனை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பானிபூரி கடைகளிலும் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் சதீஷ்குமார் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். பானிபூரி கடைகளில் பயன்படுத்தப்படும் பூரி மசால், மசாலா நீரின் மாதிரிகளை சோதனை செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவின் விருப்பத்திற்குரிய உணவான பானிபூரி கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்திலும் பரவி வரும் நிலையில் இந்த உணவால் புற்றுநோய் ஏற்படும் என்ற தகவல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran
