வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 2 ஜூலை 2024 (17:40 IST)

காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை தான் மக்கள் கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி பதிலடி

PM Modi
பாரதிய ஜனதா கட்சியை 400 இடங்களில் வெற்றி பெறும் என்று அறிவித்தது என்பதும் ஆனால் அந்த கட்சிக்கு மக்கள் 240 தொகுதிகள் மட்டுமே அளித்துள்ளார்கள் என்றும் இன்று காங்கிரஸ் கட்சி எம்பிகள் உள்பட பல எம்பிக்கள் ஆவேசமாக பேசிய நிலையில் அதற்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பை மக்கள் கொடுக்கவில்லை என்றும், அந்த கட்சிக்கு எதிர்க்கட்சி வரிசையில் உட்கார மட்டுமே மக்கள் வாக்களித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

காங்கிரஸ் ஆட்சியின் போது மக்கள் தங்கள் நம்பிக்கையை இழந்தனர் என்றும், இந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் 99 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது என்றும், நாங்கள் வெற்றி பெற்ற 240 இடங்களை இந்தியா கூட்டணியில் கூட தொட முடியவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி தோல்வியில் சாதனை படைத்துள்ளது என்றும் நரேந்திர மோடி கூறினார்.

 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பாஜக கூறிய நிலையில் அந்த கட்சி 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்று கூறும் எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடிப்போம் என்று காங்கிரஸ் கட்சி கூறிய நிலையில் வெறும் 99 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்று பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்

Edited by Mahendran