1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 23 மார்ச் 2024 (10:32 IST)

இளவரசி கேட் மிடில்டனுக்கு புற்றுநோய்..! அதிர்ச்சி தகவல்..!!

Kate Middleton
பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன், புற்றுநோய் பாதிப்பு காரணமாக கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். 
 
42 வயதான கேட் மிடில்டன் பிரிட்டனின் முடி இளவரசர் வில்லியம்ஸின் மனைவி ஆவார்.
கடந்த ஜனவரியில் கேட் மிடில்டனுக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இரண்டு வார காலம் அவர் சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை வீடியோ மூலம் அவர் உறுதி செய்துள்ளார்.
 
தனக்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என  மருத்துவக் குழு அறிவுறுத்தியது என்றும் இப்போது ஆரம்ப கட்ட சிகிச்சை பெற்று வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 
குடும்பத்தின் நலன் கருதி நாங்கள் இது குறித்த விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்தோம் என்று அவர் கூறியுள்ளார். நோய் பாதிப்பு குறித்த தகவல் எனக்கும், வில்லியம்ஸுக்கும் அதிர்ச்சி அளித்தது என்றும் அறுவை சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து மீண்டு வர எனக்கு நேரம் எடுத்தது என்றும் தெரிவித்துள்ளார்.

 
நான் நலமுடன் இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ள அவர்,  இதிலிருந்து மீண்டு வர உதவும் விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் மனதளவிலும், உடல் அளவிலும் வலுப்பெறுகிறேன் என கேட் மிடில்டன் தெரிவித்துள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு குறித்த முழு விவரம் வெளியாகவில்லை.