டாஸ்மாக் பார் அமைக்க கட்டுப்பாடுகள் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்தபின் டாஸ்மாக் தொடர்பாக அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 707 கடைகள் மூடப்பட்டது. இந்நிலையில் டாஸ்மாக் அருகில் பார்களை அமைக்க புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது..
இது தொடர்பாக புதிய விதிகளை அரசு வெளியிட்டுள்ளது. டாஸ்மாக் கடையை ஒட்டி அல்லது கடையிலிருந்து 100 மீட்டருக்குள் பார் அமைக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் பார் நடத்த தனியாருக்கு இனி டெண்டர் மூலம் உரிமை வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்களில் இருந்து மாநகராட்சி நகராட்சி பகுதிகளில் 50 மீட்டர் மற்ற பகுதிகளில் 100 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், நெல்லை, குமரிமலை பகுதி மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் பார் அமைக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், டாஸ்மாக் கடை மற்றும் பார் வேலை நேரம் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும், இரவு 10 மணிக்கு பிறகு பாரில் யாரும் இருக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது, 21 வயது பூர்த்தியாகாதவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது, பாருக்குள் அனுமதிக்க கூடாது, பணிக்கு அமர்த்தக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.