தெர்மாகோலை நானா போட்டேன்!.. எப்படி ஓட்டுனீங்க!. இப்ப தவெகவை பாருங்க!...
2017ம் வருடம் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ வைகை அணையிலிருந்து சூரியனின் வெப்பத்தில் நீர் ஆவியாகி வீணாவதை தடுப்பதற்காக தெர்மாகோலை மிதக்கவிட்ட சம்பவம் அப்போது ட்ரோலில் சிக்கியது. ரூ.10 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட இந்த திட்டம் தோல்வியில் முடிந்தது. பலத்த காற்று வீசியதால் தெர்மாகோல்கள் ஆற்றின் ஓரம் அடித்து செல்லப்பட்டது. அதன்பின் எல்லோரும் செல்லூர் ராஜூவை தெர்மாக்கோல் என்றே அழைத்தனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ தெர்மாகோலை நானாக போடவில்லை. அதிகாரிகள் சொல்லித்தான் போட்டேன். என்னை எப்படியெல்லாம் ஓட்டினீர்கள். இப்போது உள்ள ஆட்சியாளர்களை யாராவது ஓட்டுகிறார்களா?.. ஆற்றில் ஏன் நுரை வருகிறது என்று கேட்டால் சோப்பு போட்டு குளிப்பதால்தான் நுரை வருகிறது என ஒருவர் அமைச்சர் சொல்கிறார் என்று அவர் பேசினார்.
மேலும், தம்பி தனுஷ் அரசியலுக்கு வருவதை பார்த்து தவெகவினர்தான் பயப்படுகிறார்கள்.. நாங்களெல்லாம் பயப்படவில்லை.. தனுஷோ, சிவகார்த்திகேயனோ அரசியலுக்கு வருவது நல்லதுதான் என கூறியிருக்கிறார்.
மேலும், தம்பி தனுஷ் அரசியலுக்கு வருவதை பார்த்து தவெகவினர்தான் பயப்படுகிறார்கள்.. நாங்களெல்லாம் பயப்படவில்லை.. தனுஷோ, சிவகார்த்திகேயனோ அரசியலுக்கு வருவது நல்லதுதான் என கூறியிருக்கிறார்.

