1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TN get rain as strom in andaman sea

அந்தமானில் உருவாகியுள்ள புயல் ; தமிழகத்தில் மீண்டும் மழை - வானிலை மையம் எச்சரிக்கை

Anadman Sea
அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகத்தில் அடுத்த வாரம் மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.


 

 
சென்னையில் கடந்த சில நாட்களாக பகல் அல்லது இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. 
 
தென்மேற்கு வங்கக் கடலில் இருந்த குறைந்த காற்றாழுத்த தாழ்வு பகுதி தற்போது மத்திய மேற்கில் உள்ளது. இதனால், அடுத்து வரும் 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களில்  கனமழையும், உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில், குறிப்பாக தென் மாநிலங்களில் வருகிற 7ம் தேதி முதல் மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களுக்கு 48 மணி நேரம் இலவச சிகிச்சை: கேரள முதல்வர்