1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 4 நவம்பர் 2017 (15:26 IST)

சாலை விபத்துக்களில் சிக்குபவர்களுக்கு 48 மணி நேரம் இலவச சிகிச்சை: கேரள முதல்வர்

சாலை விபத்துக்களில் சிக்கி படுகாயம் அடையும் நபர்களுக்கு முதல் 48 மணி நேர சிகிச்சை இலவசம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.



 
 
பொதுவாக சாலை விபத்துக்களில் சிக்குபவர்களுக்கு முதல் 48 மணி நேரம் சிகிச்சை மிகவும் முக்கியம். ஆனால் இந்த நேரத்தில் அறுவை சிகிச்சை உள்பட பல விஷயங்களுக்கு அதிக செலவாகும். இந்த செலவுக்கான தொகையை நடுத்தர, ஏழை எளிய மக்களால் செலவு செய்ய முடியாமல் நகை, வீடு உள்ளிட்டவற்றை அடமானம் வைத்து உயிரை காப்பாற்ற முயல்வர்
 
இந்த நிலையில் சாலை விபத்தில் சிக்கி காயம் அடையும் நபர்களுக்கு 48 மணி நேரம் செய்யப்படும் சிகிச்சைக்கு தேவையான முழு செலவையும் கேரள அரசே ஏற்றுக்கொள்ளும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கேரள மக்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்  என்று கருதப்படுகிறது.