1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 4 நவம்பர் 2017 (10:30 IST)

8 நாட்களில் 58 சதவீத வடகிழக்கு பருவமழை - தத்தளிக்கும் சென்னை

தமிழகத்தில் எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழையின் 54 சதவீதம் கடந்த 8 நாட்களில் சென்னையில் மட்டுமே பெய்திருப்பது தெரியவந்துள்ளது.


 

 
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. ஆனால், தொடக்கம் முதலே கனமழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக சென்னை உட்பட கடலோர மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை, கன்யாகுமரி, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
 
குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக  பெய்து வரும் மழையால் சென்னை வாசிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். நேற்று முன்தினம் இரவில் பெய்த மழையில் சென்னையின் பள்ளமான பல பகுதிகள் நீரால் சூழப்பட்டது.  மீஞ்சூர், கோவிலம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் வீட்டிலிருந்து வெளியே வர முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். பல இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதில் வீட்டிலிருந்து பொருட்கள் சேதமடைந்தன.
 
வடகிழக்கு பருவமழை கடந்த 27ம் தேதி தொடங்கியது. இதுவரை தமிழகத்தில் 554.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பொதுவாக வருடத்திற்கு 750 மி.மீட்டர் மழை பொழிவு இருக்கும். அப்படிப் பார்த்தால் கடந்த 8 நாட்களில் எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழையில் 74 சதவீதம் மழை பெய்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 441.3 சதவீத மழை பெய்துள்ளது. அதாவது 58.84 சதவீத வடகிழக்கு பருவமழை கடந்த 8 நாட்களில் சென்னையில் மட்டும் பெய்துள்ளது.