1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Kannada Organizations Protest At Attibele Border Against Tamil Nadu Over Mekedatu Dam Issue

கர்நாடக எல்லைக்குள் வராதீங்க.. வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை.. தமிழக பேருந்துகள் நிறுத்தம்...

மேகதாது அணை
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் தொடர் எதிர்ப்பை கண்டித்து, கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் தீவிர போராட்டங்களில் இறங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கர்நாடக-தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் இன்று கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்துகின்றன. 
 
இதனை முன்னிட்டு, தமிழக மக்கள் மற்றும் வாகனங்கள் இன்று கர்நாடகாவிற்குள் நுழைய வேண்டாம் என்று கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
மேலும், மேகதாது திட்டத்திற்கு தடைபோடும் தமிழக அரசை கண்டித்தும், காவிரி நீரை கர்நாடகாவே முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், வரும் 13-ஆம் தேதி மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
இதன் காரணமாக, எல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், போராட்டம் நடைபெறும் நேரத்தில் தமிழக பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அத்திப்பள்ளி எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, கர்நாடகாவிற்குள் அனுமதிக்கப்படாது என்று தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
காவிரி நீர்ப்பகிர்வு மற்றும் மேகதாது அணை விவகாரம் இரு மாநிலங்களுக்கு இடையே மீண்டும் ஒரு பரபரப்பான அரசியல் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
About Writer
சிவலிங்கம்
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஜெயிச்சா எடப்பாடி!.. தோத்தா நாங்களா?!.. பழனிச்சாமிக்கு செல்வாக்கு இல்ல!.. சிவி சண்முகம் ஆவேசம்!..