1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 4 நவம்பர் 2017 (11:28 IST)

கேலி செய்யாமல் உதவுங்கள்: ரசிகர்களுக்கு கமல் அறிவுரை

தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்க நடிகர் கமல்ஹாசனின் ரசிகர்கள் களத்தில் இறங்கி மீட்புப்பணிகளை கவனித்து வரும் நிலையில் ரசிகர்களுக்கு கமல்ஹாசன் சற்றுமுன் தனது டுவிட்டரில் அறிவுரை வழங்கியுள்ளார்.



 
 
நமது இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவிகள் செய்கையில் அரசுப் பணியாளர்களுக்கு  இடைஞ்சலோ கேலியோ இன்றி உதவுங்கள்.  ஆபத்திற்கு பாவமில்லை' என்று கூறியுள்ளார். மேலும் கடந்த சில நாட்களாக களத்தில் இறங்கி ஓய்வின்றி பணியாற்றி வரும் காவல்துறையினர்களின் முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் இன்னொரு டுவீட்டில் கூறியபோது, காவல்துறையினர்களின் அயராத பணிக்கு எனது பாராட்டுக்கள். அதே நேரத்தில் சீருடை அணிந்த காவலர்கள் மட்டுமின்றி சீருடை இல்லாத தமிழர்களும் அதிகளவில் மீட்புப்பணியின் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் என்று பதிவு செய்து காவலர்கள் நிவாரணப்பணியில் ஈடுபடும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.