தொடர்புடைய செய்திகள்
- சுத்தப் பொய்... தினகரன்தான் எங்களுக்கு தூது விட்டார் - அமைச்சர் தங்கமணி
- ஈபிஎஸ் ஆட்சியை கலைக்க தினகரனிடம் நேரம் கேட்ட ஓபிஎஸ்: அதிர்ச்சி தகவல்
- ஈபிஎஸ் ஆட்சியை கலைக்க தினகரனிடம் நேரம் கேட்ட ஓபிஎஸ்: அதிர்ச்சி தகவல்
- ’சேகுவேரா’ சாமி ’காஸ்ட்ரோ’ செல்வம் – ஈபிஎஸ் ஓபிஎஸ்ஸை வச்சு செய்யும் நெட்டிசன்கள்
- ஈபிஎஸ்-ஓபிஎஸ், பிடல் காஸ்ட்ரோ-சேகுவேராக்கு இணையானவர்கள்: அமைச்சர் ஜெயக்குமார்
இங்கு ஓபிஎஸ் பேட்டி, அங்கு ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு
இன்று தினகரன் அளித்த பேட்டி அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. துணை முதல்வர் ஓபிஎஸ் தன்னை வந்து சந்தித்ததாகவும், அந்த சந்திப்பின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விட்டுவிட்டு என்னுடன் வருவதாகாவும் அவர் கூறினார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும், தினகரன் அதிமுகவுடன் ஒன்றாக இணைவது தொடர்பாக ஒபிஎஸ் அவரது மகன் ஆகியோர் என்னை அழைத்தனர். அந்த சந்திப்பின் போது தர்மயுத்தம் நடத்தியது தவறுதான் என மன்னிப்பு கேட்டார் என்றும் கூறினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் தற்போது பன்னீர் செல்வத்தின் செய்தியாளர் சந்திப்பு நடந்து வருகிறது. அதில் அவர் தினகரன் பொய் கூறுவதாகவும், ஆட்சியை கவிழ்க்க தினகரன் இவ்வாறு செய்து வருகிறார் என தினகரன் கூறிய அனைத்து செய்தியையும் பன்னீர் செல்வம் மறுத்துள்ளார்.
இந்த பக்கம் ஓபிஎஸ் செய்தியாளர்களீடம் பேட்டி அளித்து வரும் நிலையில், அங்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்திக்க சென்றுள்ளார். சென்னை கிண்டியுள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் சந்திப்பு நடைபெற்று வருகிறது.
