ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 30 செப்டம்பர் 2018 (21:04 IST)

ஈபிஎஸ்-ஓபிஎஸ், பிடல் காஸ்ட்ரோ-சேகுவேராக்கு இணையானவர்கள்: அமைச்சர் ஜெயக்குமார்

இன்று நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழாவில் பேசிய அமைச்சர் ஜெயகுமார், '"சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ போல தமிழக மக்களுக்காக போராடுபவர்கள் தமிழக முதல்வரும் துணைமுதல்வரும் என வர்ணித்தார். அதுமட்டுமின்றி "முதல்வரும், துணை முதல்வரும் இரட்டை இலையை மீட்டெடுத்து இரட்டைகுழல் துப்பாக்கியாக செயல்படுகின்றனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் "20 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக சொல்லி மக்களை ஏமாற்றி கொண்டிருப்பவர்தான் எம்ஜிஆர் ஆட்சியை தரப்போகிறேன் என்று சொல்கிறார் என ரஜினியையும் மறைமுகமாக தாக்கினார்.

அனைத்து துறைகளிலும் ஊழல் செய்து சாதனை படைத்த பெருமை திமுகவையே சேரும் என்றும், முதலமைச்சர் ஆவதற்கு தினகரனுக்கு என்ன தகுதி இருக்கின்றது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக விமர்சனம் செய்தார். மேலும் ஒருசிலர் சினிமாவில் முதல் இன்னிங்சை முடித்துவிட்டு, 2-வது இன்னிங்ஸாக அரசியலுக்கு வர பார்க்கின்றனர் என்றும் அவர்கள் எண்ணம் ஈடேறாது என்றும் அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.