வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 5 அக்டோபர் 2018 (18:57 IST)

காத்துல ஊழல் பண்ணவங்களோடு சேர்ந்து ஒரு விரல் புரட்சியா? என்னங்க விஜய்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்தது. அப்போது விஜய் பேசிய சில கருத்துக்கள் இன்னும் அடங்காதா தீயாய் இன்னும் இருக்கிறது. 
 
பல அரசியல்வாதிகல் விஜய் பேச்சை விமர்சித்தாலும் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அர்ஜூன் சம்பத், சமீபத்தில் இது குறித்து தனியார் மீடியா நிறுவனத்திற்கு பேட்டி அளித்தது பின்வருமாறு, 
 
காத்துல ஊழல் பண்றாங்கன்னு படத்துல வசனம்பேசி நடிச்சிட்டு, இப்போ அதே காத்துல ஊழல் பண்ணுன 2ஜி கம்பெனிக்கு சர்கார்னு படம் நடிச்சி கொடுத்து ஒரு விரலை தூக்கி புரட்சி பண்ணுவாங்களாம். 

 
இவ்வளவு நாள் விஜய் பேசி அரசியலுக்கும் சர்கார் விழாவில் பேசிய அரசியலுக்கு வித்தியாசம் காணப்படுகிறது. விஜய் சீக்கிரம் அரசியலுக்கு வருவார் என நினைக்கிறேன். வரட்டும் பார்ப்போம்... என பேசியுள்ளார்.