ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 5 அக்டோபர் 2018 (10:46 IST)

ஈபிஎஸ் ஆட்சியை கலைக்க தினகரனிடம் நேரம் கேட்ட ஓபிஎஸ்: அதிர்ச்சி தகவல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தினகரனிடம் நேரம் கேட்டதாக வெளிவந்துள்ள தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் இணைந்து ஒருங்கிணைந்த அதிமுகவாக இருந்தாலும் இரு அணி தலைவர்களிடையே பழைய மனக்கசப்பு இருப்பதாக அவ்வப்போது அரசியல் வதந்திகள் எழுவதுண்டு.

இந்த நிலையில் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த தினகரனின் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன், 'எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக டிடிவி தினகரனிடம் பேச வேண்டும் என துணை முதல்வர் ஓபிஎஸ் நேரம் கேட்டதாக கூறியுள்ளார்.

இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஒற்றுமையை குலைக்க சதியா? அல்லது உண்மையிலேயே ஓபிஎஸ் நேரம் கேட்டாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்