1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cm vijay order to make electrical substation

மின்வெட்டு பிரச்சனை!. முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு!..

vijay
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பல பகுதிகளிலும் கடந்த பல நாட்களாகவே இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இரவில் பல மணி நேரங்கள் மின்சாரம் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் கோபமடையும் அந்த பகுதி மக்கள் மின் அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஆனால் அதிகாரிகள் அவர்களுக்கு சரியான பதிலை சொல்வதில்லை. இதன் காரணமாக அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டங்களிலும் ஈடுபடுகிறார்கள். மின்வெட்டு பிரச்சனையை தொடர்பாக அமைச்சர் சீட்டில் நிர்மல் குமார் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசி வருகிறார். மின் வாரியத்திற்கு மேலும் 75 ஆயிரம் பணியாளர்கள் தேவைப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.

இந்நிலையில்தான், எரிசக்தி துறை சாய்ந்து ஆய்வு கூட்டத்தில் மின்வெட்டு பிரச்சனை தொடர்பாக முக்கிய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய தமிழக முதல்வர் விஜய் தமிழகத்தில் 15 ஆயிரத்து 32 கோடி மதிப்பில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கவும், 15,058 மின் பணியாளர்களை முறைப்படி நியமிக்கவும் எரி சக்திதுறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார்
. மின் தளவாடப் பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்யவும் மின் பணியாளர்களை ரோந்துப் பணியில் ஈடுபடுத்தவும் அவர் அறிவித்தியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
மருத்துவரின் சீட் இல்லாமல் இருமல் மருந்து வாங்க தடை!.. வெளியானது புதிய அறிவிப்பு..