1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tiruvallur school holiday tomorrow

திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

school
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் நாளை முதல் தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை அதிக மழை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக நவம்பர் 11-ம் தேதி அன்று கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே அனைத்து கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் இன்னும் ஒரு சில மாவட்டங்களில் இருந்து பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
’ஆன்லைன் ரம்மியை தடை செய்யக்கூடாது?’ – நீதிமன்றத்தில் புதிய மனு!