வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 8 நவம்பர் 2022 (14:28 IST)

கனியாமூர் பள்ளியில் திடீர் சோதனை: என்ன காரணம்?

kaniyamur
கனியாமூர் பள்ளியில் அதிகாரிகள் திடீரென சோதனை செய்து வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் என்ற பகுதியில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி என்பவர் திடீரென மர்மமான முறையில் மரணமடைந்தார்
 
இவரது மரணம் காரணமாக போராட்டம் நடைபெற்றது என்பதும் இந்த போராட்டம் கலவரமாக மாறி பள்ளி வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது என்பதும் பள்ளி பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது கனியாமூர்  தனியார் பள்ளி மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த பணியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் கனியாமூர் தனியார் பள்ளியை திறக்க அனுமதி கேட்டு அதன் நிர்வாகிகள் விண்ணப்பம் செய்துள்ளதை அடுத்து அந்த பள்ளியில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டதா என பொதுப்பணித்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் இந்த ஆய்வில் ஆர்டிஓ அவர்களும் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
இந்த அதிகாரிகள் ஆய்வு செய்தபின் அளிக்கும் அறிக்கையை பொருத்து இந்த பள்ளி திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran