1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tirunelveli quarry accident

நெல்லை கல்குவாரி விபத்து; இருவர் மீட்பு – மீட்பு பணிகள் தீவிரம்!

Tirunelveli
திருநெல்வேலி கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். அப்போது திடீரென பெரிய பாறை இடிந்து விழுந்ததில் சுமார் 6 ஊழியர்கள் அதில் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து அறிந்த பாளையங்கோட்டை மற்றும் நாங்குநேரி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பாறைகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேசிய மீட்பு படையும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.

இதுவரை இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் பாறைகளில் சரிவு ஏற்பட்டதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick