போராட்டத்திற்கு ஆதரவான வீடியோவை நீக்குங்கள்.. மாணவர்களுக்கு சென்னை ஐஐடி உத்தரவா?
நாடு முழுவதும் மாணவர்களின் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், சென்னை ஐஐடி நிர்வாகம் மாணவர்களை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்ட போராட்ட ஆதரவு வீடியோக்களை நீக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
ஜந்தர் மந்தர் போராட்டம் மற்றும் சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வைரல் வீடியோக்கள் குறித்து நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
டீன் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி, மாணவர்கள் தாங்கள் பதிவிட்ட ஒற்றுமை பதிவுகளையும், பதாகைகளுடன் கூடிய வீடியோக்களையும் உடனடியாக அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி வளாகத்தின் விதிமுறைகளை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'காக்ரோச் ஜனதா கட்சி' மற்றும் சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு கல்வி நிலையங்களிலும் மாணவர்கள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வரும் வேளையில், ஐஐடி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை மாணவர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
