வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 மே 2022 (10:00 IST)

திருட சென்ற இடத்தில் இளம்பெண்ணுக்கு வன்கொடுமை! – சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அருகே குன்றத்தூர் பகுதியில் வீட்டில் திருட சென்ற திருடன் அங்கு பொருட்கள் இல்லாததால் இளம்பெண்ணை வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவன் சதீஷ். திருடனான சதீஷ் மீது ஏற்கனவே சில திருட்டு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குன்றத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றை நோட்டமிட்டு வந்த சதீஷ் அங்கே திருட இரவு சென்றுள்ளான்.

ஆனால் அந்த வீட்டில் திருடுவதற்கு பணமோ, நகையோ இல்லாததால் ஏமாற்றமடைந்த சதீஷ், அந்த வீட்டில் இருந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பின்னர் அங்கேயே விடியும் வரை படுத்துறங்கிவிட்டு காலையில் எழுந்து சென்றுள்ளான்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் சதீஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.