1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Thoppu Vengadachalam competet in Perundhurai

தேர்தலில் சீட் தராத அதிமுக; சுயேட்சையாக களமிறங்கும் தோப்பு வெங்கடாசலம்!

Tamilnadu
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் சீட் கிடைக்காத நிலையில் சுயேட்சையாக போட்டியிடுகிறார் தோப்பு வெங்கடாசலம்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது அதிமுக. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விருப்ப மனு அளித்திருந்த நிலையில் அந்த தொகுதியில் ஜெயக்குமார் என்பவர் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.

இதனால் மன கலக்கம் அடைந்த தோப்பு வெங்கடாசலம் பெருந்துறை மக்களிடம் பேசும்போது கண்ணீர் வடித்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அதிமுக வாய்ப்பு தராத நிலையில் சுயேட்சையாக பெருந்துறை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் தோப்பு வெங்கடாசலம். இன்று இதற்கான வேட்புமனுவை அவர் தாக்கல் செய்ய உள்ள நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
10 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம்; அதிமுக வைகைசெல்வன் மீது வழக்கு!