வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 மார்ச் 2021 (09:14 IST)

10 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம்; அதிமுக வைகைசெல்வன் மீது வழக்கு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வைகைசெல்வன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன அரசியல் கட்சிகள். இந்நிலையில் அதிமுக சார்பில் அருப்புக்கோட்டை தொகுதியில் வைகைசெல்வன் போட்டியிடுகிறார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வைகைசெல்வன் 10 மணிக்கு மேலும் பிரச்சாரம் செய்து வந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து வைகைசெல்வன் மீது தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.