வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 18 மார்ச் 2021 (08:47 IST)

தஞ்சாவூரில் மேலும் ஒரு பள்ளியில் கொரோனா! – மக்கள் அதிர்ச்சி!

தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் மேலும் ஒரு பள்ளியில் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தற்சமயம் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. முன்னதாக அம்மாப்பேட்டை அரசு பெண்கள் பள்ளியில் 56 மாணவிகள், 1 ஆசிரியர், 9 பெற்றோர்களுக்கு கொரோனா உறுதியானது. அதை தொடர்ந்து ஆலங்குடி, மதுக்கூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் தஞ்சாவூர் அரசு உதவி பெரும் பள்ளி ஒன்றில் 2 ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. தொடர்ந்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.