விஜய்க்கு போன தலித் ஓட்டுகள்!.. புலம்பும் திருமாவளவன்!. நடப்பது என்ன?...
தமிழக அரசியலில் சாதியின் முக்கியத்துவம் மிகவும் அதிகம். அரசியல் கட்சியின் தலைவர் என்ன சாதி என்பதை பார்த்துதான் அவரின் சாதியினர் அவருக்கு ஓட்டு போடுவார்கள்.. இதனால்தான் தமிழகத்திலும் பல சாதி தலைவர்கள் அரசியல் தலைவர்கள் மாறினார்கள். அப்படி தலித் மக்களின் பிரச்சனைக்கு குரல் கொடுப்பதற்காக விடுதலை சிறுத்தை கட்சி என்கிற அரசியல் இயக்கத்தை தொடங்கியவர் தொல்.திருமாவளவன். கடந்த 35 வருடங்களாக தமிழக அரசியலில் களமாடி வருகிறார்.
ஆனால் தமிழக அரசியலில் அவர்களால் அதிகாரத்திற்கு வர முடியவில்லை. திருமாவளவனுக்கு எம்.பி.சீட் கிடைத்ததே தவிர தமிழக ஆட்சி மற்றும் அதிகாரத்தில் விசிகவுக்கு பங்கு கொடுப்பதில் திமுகவுக்கு விருப்பம் இல்லை. ஆனாலும் வேறு வழியில்லாமல் விசிக திமுக கூட்டணியிலேயே தொடர்ந்து வந்தது.
2026 சட்டமன்ற தேர்தலில் தொகுதி ஒதுக்கீட்டின்போது விசிகவை எவ்வளவு முடியுமோ அவ்வளவு திமுக அவமானப்படுத்தியது. இதை திருமாவளவனே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அவர் கேட்ட தொகுதிகளை திமுக கொடுக்கவில்லை. ஒருபக்கம் சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக ஆட்சியில் அமர்ந்துவிட்டது. வேறு வழியில்லாமல் அந்த கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் நிலைக்கு விசிக தள்ளப்பட்டது. அதேநேரம், விசிக எம்எல்ஏ வன்னியரசு தற்போது அமைச்சராக மாறியிருக்கிறார். கடந்த 35 வருடங்களாக இது நடக்கவில்லை.
இது திருமாவளவனுக்கு சந்தோஷம்தான் என்றாலும். திமுக கூட்டணியிலிருந்து விலகுவதில் அவருக்கு விருப்பம் இல்லை. அதனால்தான் திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என இப்போது வரை அவர் சொல்லவில்லை.. அதேநேரம் விசிகவின் வாக்கு வங்கி மொத்தமாக கரைந்து தவெக பக்கம் சென்று விட்டது..
அதாவது, தலித் ஓட்டுகள் விஜய்க்கு சென்று விட்டது. இதை திருமாவளவனும் உணர்ந்திருக்கிறார். தலித் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில்தான் விஜய் ரசிகர் மன்றங்கள் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. ஒருபக்கம் கடந்த ஐந்து வருடங்களில் தலித் மக்களுக்கு எதிரான தொடர் தாக்குதல்களை திருமாவளவன் தட்டிக் கேட்க தவறி விட்டார்.. அதனால் விசிகவின் வாக்குகள் தவெகவுக்கு சென்றது..
இப்போது தவெகவில் 8 தலித் அமைச்சர்கள் இருக்கிறார்கள்.. எனவே விஜயுடன் பயணிப்பதை தவிர திருமாவளவனுக்கு வேறு வழியில்லை.. ஆனால் அதை தவிர்த்து விட்டு மற்ற எல்லாவற்றையும் அவர் பேசிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்..