1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: திங்கள், 13 ஏப்ரல் 2026 (08:06 IST)

விஜயை தனியா நிக்க சொன்னதே பாஜகதான்!.. கொளுத்திப்போட்ட திருமாவளவன்!..

vijay
தமிழகத்தில் வருகிற 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழக அரசியல் சூடு பிடித்திருக்கிறது. திமுக தலைவர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தவெக தலைவர் விஜய், சீமான், உதயநிதி, ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்ட பலரும் பல தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இதில் தவெக தலைவர் விஜய் ஒரு நட்சத்திர வேட்பாளராக பார்க்கப்படுகிறார். ஏனெனில் அவர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர். அவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் இருக்கிறது.. அவர் எங்கு சென்றாலும் அவரை பார்ப்பதற்காக மக்கள் கூடுகிறார்கள். நேற்று கூட அவர் கன்னியாகுமரிக்கு சென்றிருந்த போது அவரை பார்க்க பல ஆயிரம் மக்கள் கூடிவிட்டனர்.. அதிலும் அவர் சைக்கிளில் ஓட்டி பிரச்சாரம் செய்தது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் செய்யூறு தொகுதியின் விடுதலைச் சிறுத்தை கட்சி வேட்பாளரை ஆதரித்து நேற்று திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது ‘நாம் போட்டியிடும் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.. அதில் செய்யூர் முதலாவது தொகுதியாக இருக்க வேண்டும். வாக்குகள் சிதறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை பழனிச்சாமி முதல்வரானால் 2 மாதங்கள் கூட பாஜக பொறுத்துக் கொள்ளாது.. பழனிச்சாமியை தூக்கி விட்டு அண்ணாமலையை கூட அவர்கள் முதல்வராக நியமிப்பார்கள்.. அதேபோல விஜய் கூட்டணி இல்லாமல் தனியாக நிற்க சொன்னதும் பாஜகதான்.. அதிமுக கூட்டணியில் அவர் இணைய வேண்டும் என்ற அழுத்தம் கொடுத்தர்கள் என சொல்லப்பட்டதெல்லாம் பொய்’ எனறு அவர் பேசியிருக்கிறார்..