1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. thiruma and communist parites discussion about tvk

திமுக நிலைப்பாட்டை மீறி திருமாவளவன் தவெகவை ஆதரிப்பாரா?!.. ஒரு அலசல்....

thiruma vijay
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெகவுக்கு 108 தொகுதிகள் கிடைத்தது. ஆனால் ஆட்சியமைக்க 117 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில் காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி அமைத்து தங்களின் 5 எம்எல்ஏக்களை கொடுத்திருக்கிறது. எனவே தவெக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது.

அதேநேரம் தவெக ஆட்சியமைக்க இன்னும் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை
. எனவே, விசிக, மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக தலைவர் விஜய் ஆதரவு கேட்டிருக்கிறார். அவர்கள் தற்போது விஜய்க்கு ஆதரவு கொடுப்பது பற்றி ஆலோசனை நடத்தி வருகிறார்கள்..

இந்த கட்சிகள் எல்லாமே திமுகவுடன் கொள்கை ரீதியாக பல வருடங்களாக உடன்பட்டு கூட்டணியில் இருக்கிறார்கள். விஜய் கட்சி துவங்கியது முதலே திமுகவை நக்கலடித்ததோடு, கடுமையாக விமர்சித்து பேசியவர். எனவே, திமுகவின் நிலைப்பாட்டை மீறி திருமாவளவனோ, மற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளோ விஜய்க்கு ஆதரவு கொடுப்பார்களா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.. எப்படி இருந்தாலும் இன்னும் சில மணி நேரங்களில் அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்..
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் அதிமுக ஆட்சி.. பழனிச்சாமி முதல்வர்!.. தம்பிதுரை பேட்டி...