செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 28 ஜூலை 2022 (15:36 IST)

தமிழகத்தில் குரங்கம்மை நோய் தொற்று இல்லை- மா.சுப்பிரமணியன்

ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவி வரும் குரங்கம்மை வைரஸ் தற்போது, இந்தியா உட்பட பல நாடுகளில் பரவி வருகிறது. இந்த நோய் இன்னும் அதிகமாக பரவ வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் இந்தியா உள்பட அனைத்து நாடுகளையும் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு ஊசி போட்டது போலவே குரங்கு அம்மை நோய்க்கும் ஒரு சில நாடுகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை மக்கள் ஆர்வத்துடன்போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், தமிழ் நாட்டில் குங்கம்மை நோய் தொற்று இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

தமிழ் நாட்டில் தற்போது வரை கொரொனா பாதிப்புகள் கண்டறியப்படவில்லை வெளி நாடுகளில் இருந்து வருவோர்க்கு குரங்கம்மை  நோய்க்கான அறிகுறி உள்ளதா எனத் தீவிரமாகப் பரிசோதனை செய்யப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.