திங்கள், 7 ஏப்ரல் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 7 ஏப்ரல் 2025 (17:29 IST)

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வு.. ஆனால் விலையில் மாற்றமில்லை..!

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதற்கிடையில், பெட்ரோல், டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்ற தகவல் பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
 
பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.13 ஆகவும், டீசல் மீதான கலால் வரி ரூ.10 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில், இந்த சுமை வாடிக்கையாளர்களுக்கு இல்லை என்றும், கூடுதல் வரியாக அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
கடந்த 2002ஆம் ஆண்டு கலால் வரி குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கலால் வரி உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்த்தப்பட்டாலும், பொதுமக்களுக்கு எந்தவிதமான நேரடி பாதிப்பும் இல்லை என்பது ஆறுதலான தகவலாகும்.
 
ஏற்கனவே, இன்று வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva