1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2022 (11:18 IST)

கேரளாவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்!!

கேரளாவில் உள்ள மானந்தவாடியில் உள்ள இரண்டு பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதிப்படுத்தியுள்ளனர்.


போபாலில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹை செக்யூரிட்டி அனிமல் டிசீசஸ் நிறுவனத்தில் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட பிறகு இரண்டு பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது பரிசோதனை முடிவுகளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது பண்ணையில் உள்ள 300 பன்றிகளை அழிப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

நோய் பரவாமல் தடுக்க கால்நடை பராமரிப்புத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த மாத தொடக்கத்தில், பீகார் மற்றும் சில வட கிழக்கு மாநிலங்களில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை கேரளா கடுமையாக்கியது.

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலை அரசு கண்டறிந்துள்ளதால், குறைந்தபட்சம் அடுத்த ஒரு வாரத்திற்கு பன்றி இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்க்குமாறு மாநில அரசு அதன் குடியிருப்பாளர்களை வலியுறுத்தியது.

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் என்பது வீட்டுப் பன்றிகளை பாதிக்கும் மற்றும் ஆபத்தான வைரஸ் நோயாகும். பன்றிகளுக்கு மிகவும் தொற்று மற்றும் ஆபத்தான, ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் மனிதர்களுக்கு பரவாது.