தொடர்புடைய செய்திகள்
- இங்கிலாந்து பிரதமர் தேர்தல்: ரிஷி சுனக்குக்கு திடீர் பின்னடைவு
- அடிச்ச வெயில்ல சிக்னலே உருகிட்டு...? - இங்கிலாந்தை வெளுக்கும் வெப்பம்!
- “ரிஷப் பண்ட் அதை மட்டும் செய்தால் நல்லா சம்பாதிக்கலாம்…” சோயப் அக்தர் கருத்து!
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!
- ஸ்கர்ட் அணிந்தாலே தப்பா நடந்துக்குறாங்க..! – இங்கிலாந்து மாணவிகள் புகார் மனு!
டி 20 கிரிக்கெட்டின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர்… இங்கிலாந்து இமாலய வெற்றி!
இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான தொடர் தோல்விகளுக்குப் பிறகு தற்போது இங்கிலாந்து அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் டி 20 போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 234 ரன்கள் சேர்த்து அசத்தியது. சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச இரண்டாவது ஸ்கோர் இதுவாகும். இங்கிலாந்து அணி சார்பாக பேர்ஸ்டோ 90 ரன்களும் மொயின் அலி 52 ரன்களும் சேர்த்தனர்.
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 193 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.