தொடர்புடைய செய்திகள்
- ஒவைசியிடம் ரூ.3000 கோடி வக்பு சொத்து உள்ளது: தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் தகவல்..!
- வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?
- திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!
- மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே வக்ப் மசோதா: பிரதமர் மோடி கருத்து
- மாநிலங்களவையில் நிறைவேறியது வக்ஃப் சட்டத் திருத்த மசோதா.. அதிமுக எதிர்த்து வாக்களிப்பு..!
திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கேரளா, அந்த சட்டத்தை ஏற்றுக் கொண்ட முதல் மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்த சட்ட மசோதாவுக்கு, தமிழ்நாடு உட்பட பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. அவற்றில் கேரளா ஒன்றாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், புதிய சட்டத்தின் கீழ் வக்பு வாரியத்தை ஏற்படுத்த, இன்னும் இரண்டு மாதங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த எதிர்க்கட்சியான காங்கிரஸ், இந்த சட்டத்திற்கு கடுமையாக எதிர்த்தது. கேரள சட்டசபையில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் திடீர் திருப்பமாக, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக, புதிய சட்டத்தின் கீழ் வக்பு வாரியத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது கேரள அரசு என்பதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
