திங்கள், 7 ஏப்ரல் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 7 ஏப்ரல் 2025 (17:05 IST)

வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் திடீர் உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

cylinder
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று தான் கேஸ் சிலிண்டர் விலை மாற்றம் இருக்கும் என்ற நிலையில், இன்று திடீரென வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
எரிவாயுவை குறைந்த விலைக்கு விற்பதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு கோடி கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த இழப்பை ஈடுசெய்யும் விதமாக வீட்டு உபயோகத்திற்கான சமையல் சிலிண்டர் கேஸ் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது என்றும் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்திப் சிங் புரி கூறியுள்ளார். 
 
மேலும் உதுவாலா திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள் மற்றும் பயனாளிகள் அல்லாதவர்களுக்கும்  இந்த விலை உயர்வு பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
இந்த புதிய விலை நாளை முதல், அதாவது ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. புதிய விலை அறிவிப்பின் மூலம், 14.2 கிலோ சிலிண்டர் விலை ரூ.803ல் இருந்து ரூ.853ஆக அதிகரிக்கிறது. 
 
இந்த விலை உயர்வால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran