தொடர்புடைய செய்திகள்
- இன்னிங்ஸ் வெற்றி பெற்றது இலங்கை: ஆஸ்திரேலியா பரிதாபம்
- பிரபல கிரிக்கெட் வீரருக்கு கொரொனா தொற்று !
- இங்கிலாந்துக்கு உலகக்கோப்பை பெற்றுத்தந்த கேப்டன்… மோசமான ஃபார்மால் அதிர்ச்சி முடிவு?
- Viral Video: முதலை எல்லாம் எனக்கு அசால்ட்டு..! –முதலையை அடித்துத் துரத்திய முதியவர்!
- SL Vs Aus ODI: 30 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் வெற்றி கண்ட இலங்கை அணி
ஆஸ்திரேலியா தொடரில் இருந்து பின்வாங்கிய தென் ஆப்பிரிக்கா… உலகக்கோப்பை நேரடி தகுதிக்கு சிக்கல்!
தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் அந்த தொடரை கைவிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவோடு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட இருந்தது. ஆனால் ஒருநாள் போட்டிகளுக்கான தேதிகளை மாற்றும்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்தது. ஆனால் மாற்றுத்தேதிகள் ஒதுக்க முடியாத சூழலால் அதை மறுத்தது ஆஸி. கிரிக்கெட் வாரியம்.
இந்நிலையில் இப்போது மொத்த தொடரையும் கைவிட்டுள்ளது தென் ஆப்பிரிக்கா. இதனால் மூன்று ஒருநாள் போட்டிகளின் மூலம் கிடைக்கும் புள்ளிகளை இழப்பதால், 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு நேரடி தகுதி பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.