திங்கள், 7 ஏப்ரல் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 7 ஏப்ரல் 2025 (17:24 IST)

ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமான் - அண்ணாமலை.. ஒருவரை ஒருவர் புகழ்ந்ததால் பரபரப்பு..!

இன்று செங்கல்பட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். மேலும் அவர்கள் பேசிய போது ஒருவரை ஒருவர் புகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
செங்கல்பட்டில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
அப்போது அண்ணாமலை பேசியபோது,
 
"எனக்கும் சீமானுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன்; சீமான் தமிழில் தேசியத்தை பார்க்கிறார். அவ்வளவுதான் வித்தியாசம்.
நான் சீமானுக்கு ஆதரவாக குரல் கொடுக்க ஒரே காரணம் அரசியலில் நேர்மையாக இருப்பது. அவருடன் ஒரே மேடையில் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சி," என்று தெரிவித்துள்ளார்.
 
அதேபோல், சீமான் பேசியபோது,
 
"தமிழின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்திப் பிடிக்கிறார். பிரதமர் மோடி உலகம் முழுவதும் செல்கிறார். உலகின் முதல் மொழி தமிழ் எங்கள் இந்தியாவில் இருப்பது பெருமை என்கிறார். தாய்மொழி தெரியாமல் நீ எவ்வளவு வலியைக் கற்றாலும், நீ அறிவு கெட்டவன். தாய்மொழி இயல் கல்வி கற்க வேண்டும்," என்று வலியுறுத்தி, பிரதமரைப் பற்றி புகழ்ந்து பேசினார்.
 
சீமானை புகழ்ந்த அண்ணாமலையும், பிரதமரைப் புகழ்ந்த சீமானும் பேசியிருப்பதைப் பார்க்கும்போது, இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva