தொடர்புடைய செய்திகள்
- ஒமைக்ரான்: தடுப்பூசி போட்டாலும் கட்டுப்படுத்த முடியாது - WHO எச்சரிக்கை!
- தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களுக்கு அனுமதியில்லை - அரசு அதிரடி உத்தரவு
- தமிழகத்தில் 7 கோடியை தாண்டி தடுப்பூசி போட்டாச்சு!!
- தடுப்பூசி போட்டால்தான் மதுபானம்; மதுப்பிரியர்களுக்கு கேட் போட்ட அமைச்சர்!
- சென்னையில் இன்று 2 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு: அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்
தடுப்பூசி செலுத்தாதவர்களை அனுமதித்தால்... திரையரங்குகளுக்கு சீல்!
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்களை அனுமதிக்கும் திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் நீடித்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த சில மாதங்களில் இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளன.
எனினும் பல பகுதிகளில் மக்கள் தடுப்பூசி போட தயக்கம் காட்டி வருகின்றனர். அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள செய்ய பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகின்றனர். அதோடு பொது இடங்களுக்கு செல்லும் போது 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருப்பது கட்டாயம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்களை அனுமதிக்கும் திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
