1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 7 crores vaccinated in Tamil Nadu

தமிழகத்தில் 7 கோடியை தாண்டி தடுப்பூசி போட்டாச்சு!!

tamilnadu vaccine 12th camp
நேற்று நடைபெற்ற 12வது மெகா முகாம் மூலம் 16,05,293 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தகவல். 

 
கடந்த சில வாரங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிறன்றும் முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்நிலையில் நேற்றும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மெகா சிறப்பு முகாம்கள் நடந்தது. 
 
கனமழைக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற 12வது மெகா முகாம் மூலம் 16,05,293 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இனி வாரந்தோறும் சனிக்கிழமை அன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தமிழகத்தில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 7 கோடியை தாண்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட எதிர்கட்சிகள்! – கூட்டத்தொடர் ஒத்திவைப்பு!