வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 28 நவம்பர் 2021 (11:13 IST)

சென்னையில் இன்று 2 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு: அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்

சென்னையில் இன்று 2 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு: அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்
சென்னையில் இன்று இரண்டு லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
கடந்த சில வாரங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிறன்றும் முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் இன்று சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மெகா சிறப்பு முகாம்கள் சற்றுமுன் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் சென்னையில் தடுப்பூசி முகாமை பார்வையிட்ட அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் பருவமழை காலத்திலும் மக்கள் தடுப்பூசி முகாம்கள் அதிகமாக வருகின்றனர் என்றும் தடுப்பூசி போடுவது மக்கள் இயக்கமாக மாறி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் சென்னையில் இன்று இரண்டு லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக கூறிய அவர் தென் ஆப்பிரிக்கா, சீனா, ஹாங்காங், பிரேசில், இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து சென்னை வருபவர்கள் எட்டு நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்