1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Thamimun Ansari says decision will be announce tomorrow

திமுக ஆதரவை திரும்ப பெறவில்லை..! தகவல் தவறானது! – தமிமுன் அன்சாரி விளக்கம்!

Tamilnadu
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக வெளியான தகவல் தவறானது என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிட கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் கூட்டணியிலிருந்து விலகியதுடன் திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஆதரவு அளித்தும் பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் ஆதரவை திரும்ப பெற்றார் கருணாஸ். இந்நிலையில் தமிமுன் அன்சாரியும் திமுக ஆதரவை திரும்ப பெற்றதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது அதை மறுத்துள்ள தமுமுன் அன்சாரி நாளை செயற்குழு கூட்டத்திற்கு பிறகே அரசியல் முடிவு குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
தேமுதிக,கமஹாசனின் ம.நீ.மவுடன் கூட்டணியா??? விஜய பிரபாகரன் பதில்