செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 9 மார்ச் 2021 (15:08 IST)

உத்தரகண்ட் பாஜகவில் உட்கட்சி பூசல்? – முதல்வர் பதவியை ராஜினாமா செய்த திரிவேந்திர சிங் ராவத்!

உத்தரகாண்டில் பதவிக்காலம் முடிய இன்னும் சில காலமே உள்ள நிலையில் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநில சட்டமன்ற தேர்தலில் வென்று முதல்வராக இருந்து வந்தவர் திரிவேந்திர சிங் ராவத். அவரது பதவிக்காலம் முடிய சில மாதங்களே உள்ள நிலையில் எதிர்வரும் டிசம்பரில் உத்தரகாண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சி உட்பூசல் காரணமாகவும், பாஜக மேலிடம் வலியுறுத்தலின் பேரிலும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.