1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Temperatures will be above normal for the next 2 days Meteorological Center

அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப நிலை இயல்பைவிட கூடுதலாக இருக்கும் ! -வானிலை மையம்

அடுத்த 2 நாட்கள்
தமிழ் நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப நிலை இயல்பைவிட கூடுதலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
 
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 
 
''23 ஆம் தேதி முதல் 24 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
 
அகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
 
23.03.2024 முதல் 27.03.2024 வரை: தமிழகத்தில் பரிசு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும்.
 
23.03.2024 மற்றும் 24.03.2024: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இஉர்க்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
 
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.
 
மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை'' என்று தெரிவித்துள்ளது. 
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
பண மோசடி வழக்கு..! தெலுங்கானா முன்னாள் முதல்வரின் மகளுக்கு காவல் நீட்டிப்பு..!!