அடுத்த 5 நாட்களுக்கு சுட்டெரிக்கப் போகும் வெயில்.. வானிலை மையம் எச்சரிக்கை..
தமிழகம் முழுவதும் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி விட்டதை அடுத்து கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது என்பதும் தினமும் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்றும் குறிப்பாக 20 முதல் 22 ஆம் தேதி வரை தமிழகத்தில் லேசான மழை பெய்தாலும் பல பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி வரை பதிவாகும் என்றும் அதிகபட்சமாக 35 டிகிரி வரை பதிவாக வாய்ப்பு இருக்ககூடிய என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்து வரும் சில நாட்களில் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தொடும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்
மதுரை, திருச்சி, கரூர், விருதுநகர், கோவை, சேலம், ஈரோடு, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய இடங்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Edited by Mahendran