வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 15 மார்ச் 2024 (18:22 IST)

தமிழகத்தில் 20 ஆம் தேதி மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில்  ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் வரும் 19 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
 
வரும் 20 ஆம் தேதி மற்றும் 21 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
 
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பில்,  இன்று , நாளை ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலையில், இயல்பை காட்டிலும், 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்ககூடும் என்று தெரிவித்துள்ளது.