1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tasmac shops in 4 districts including Chennai will be closed tomorrow!

4 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

4 districts including Chennai
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள சாலைகள் வெள்ளக்காடான நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தீவிர புயலாக வலுவடைந்துள்ள மிக்ஜாம் தற்போது சென்னைக்கு 90 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இனறிரவு வரை 60 கிமீ வேகத்தில் மிக்ஜாம் புயல் வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து வரும் நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் நாளையும் (டிசம்பர் ஆம் தேதி  செவ்வாய்கிழமை )பள்ளி, கல்லூரி,  அரசு அலுவலகங்களுக்கு  பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
மிக்ஜாம் புயல் எதிரொலி: அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு- அண்ணா பல்கலை