ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 3 ஜூலை 2024 (15:35 IST)

தீபாவளி முதல் டாஸ்மாக் கடைகளில் ‘கட்டிங்? டாஸ்மாக் நிர்வாகம் திட்டமா?

Tasmac
தீபாவளி முதல் டாஸ்மாக் கடைகளில் கட்டிங் கிடைக்கும் என்று கூறப்பட்டு வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதற்கான அனுமதியை தமிழக அரசிடம் இருந்து டாஸ்மாக் பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
 
ஏற்கனவே டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மில்லி அளவில் மது வகைகளை விற்க திட்டமிட்டு வருவதாக கூறப்படும் நிலையில் இந்த திட்டத்திற்கு அன்புமணி உள்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
தற்போது கட்டிங் குடிக்க நினைப்பவர்கள் இரண்டு பேர் சேர்ந்து ஒரு குவார்ட்டர் வாங்கி ஆளுக்கு பாதியாக பிரித்துக் கொள்கின்றனர். இதற்கு இன்னொரு ஆளை தேடுவதற்காக வாசலில் குடிமகன்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது தமிழக அரசே கட்டிங்  மது பாட்டில்களை விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருப்பதாகவும் இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
ஏற்கனவே ஒரு சில மாநிலங்களில் இதே போன்று 90 மில்லி மதுபானம் விற்கப்பட்டு வரும் நிலையில் அது தமிழகத்திலும் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் 67 பேர் உயிரிழந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் அதிக விலையில் மது விற்பதால் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்கின்றனர் என்றும் அதை தடுக்க தான் தற்போது 90 மில்லி கட்டிங் திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva