திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 2 ஜூலை 2024 (12:38 IST)

ஊரு பூரா டாஸ்மாக் தொறந்துவச்சிட்டு, குடிக்குறவன குத்தம் சொல்றீங்க- கவனம் ஈர்க்கும் பாட்டல் ராதா டீசர்!

இயக்குனர் பா ரஞ்சித் சமூகநீதிக்கான படங்களை இயக்குவதோடு மட்டுமில்லாமல் தன்னுடைய நீலம் புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் மூலமாக படங்களைத் தயாரிக்கவும் செய்கிறார்.  இந்நிலையில் பலூன் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தோடு அவரின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து பாட்டல் ராதா என்ற படத்தைத் தயாரிக்கிறது. இந்த தினகரன் சிவலிங்கம் இயக்குகிறார்.

ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்தில் குருசோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் , ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றது. படத்தின் போஸ்டரே குடிப் பழக்கத்துக்கு அடிமையான ஒருவரின் கதையை சொல்லும் படம் என்பதைக் காட்டியது.

இந்நிலையில் இப்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. எதிர்பார்த்தது போலவே உழைக்கும் வர்க்க மக்கள் எப்படி குடியடிமைகளாக ஆகிறார்கள், அதனால் அவர்கள் குடும்பத்துக்குள் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்ன என்பதை காட்டுவதாக டீசர் இடம்பெற்றுள்ளது. டீசரின் இறுதியில் இடம்பெறும் “ஊரு பூரா டாஸ்மாக் தொறந்துவச்சிட்டு, குடிக்குறவன குத்தம் சொல்றீங்க” என்ற வசனம் அரசைக் கேள்வி கேட்பது போல அமைந்துள்ளது.