சனி, 14 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 29 ஜூன் 2024 (15:49 IST)

டாஸ்மாக் மதுபானத்தில் கிக் இல்லை! சட்டமன்றத்தில் அமைச்சர் துரை முருகன் பேச்சு!

duraimurugan
அரசு விற்பனை செய்யும் டாஸ்மாக் மதுபானத்தில் குடிமகன்களுக்கு தேவையான கிக் இல்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் துறைமுருகன் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை, ஆனால் அரசாங்கம் விற்கும் மதுவில் அவர்களுக்கு தேவையான கிக் இல்லாததால் கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாரத்தை குடிக்கின்றனர் என சட்டமன்றத்தில் அமைச்சர் துறைமுருகன் பேசி உள்ளார்.
 
மேலும் அரசாங்கம் அவர்களுக்கு சாஃப்ட் டிரிங் போல மாறிவிடுகிறது என்றும் எனவேதான் வீட்டில் பூச்சி விளக்கில் விழுவதைப் போல கள்ளச்சாராயத்தில் விழுகின்றனர் என்றும் அவர் கூறினார். 
 
அதற்காக தெருவுக்கு தெரு போலீஸ் ஸ்டேஷன் திறக்க முடியாது என்றும் மனிதனாய் பார்த்து தான் திருந்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran