1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Can Tasmac do this to increase its income? Thiruma indirectly insulted the DMK government..!!

டாஸ்மாக் வருமானத்தை பெருக்க இப்படி செய்யலாமா.? திமுக அரசை மறைமுகமாக சாடிய திருமா..!!

Thiruma
டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு ஆண்டு அரசுக்கு வருமானம் பெருக்க வேண்டும் என்பதற்காக ஐஏஎஸ் அதிகாரியை செயல்பட வைப்பது மக்களுக்கு விரோதமான செயல் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்  தெரிவித்துள்ளார்.

முகநூல் நேரலையில் பேசிய அவர்,  கள்ளக்குறிச்சியில் 2 நாட்கள் மக்களை சந்தித்ததில், அரசு மதுபான கடைகளை மூட வேண்டும் என்பதையே ஒருமித்த குரலாக இருப்பதாக தெரிவித்தார். ஆட்சிகள் மாறினாலும் கள்ளச்சாராய தொழில் தொடர்கிறது என்பதே மக்கள் கருத்தாக இருக்கிறது என்றும் பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதிகளில் மட்டுமல்ல, உழைக்கும் மக்களை குறிவைத்து இந்த வணிகம் நடக்கிறது என்றும் அவர் குற்றச்சாட்டினார். 
 
முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்ற கறாரான முடிவுக்கு அரசு வந்தால் தான் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும் என்று திருமாவளவன் தெரிவித்தார். நல்ல சாராயத்தை எப்படி விற்பனை செய்வது என்று மாதந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்துவதும், ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடத்துவதெல்லாம் தேவையில்லை என குறிப்பிட்ட அவர், ஆண்டுக்கு ஆண்டு அரசுக்கு வருமானம் பெருக்க வேண்டும் என்பதற்காக ஐஏஎஸ் அதிகாரியை செயல்பட வைப்பது மக்களுக்கு விரோதமான செயலாகத்தான் இருக்கிறது என்று விமர்சித்துள்ளார்.
 
எனவே, பெரும்பான்மையான பெண்களின் கோரிக்கையை ஏற்று, பூரண மதுவிலக்கு கோரி சென்னையில் ஜூன் 24-ல் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் அரசியல் ஆதாயம் தேடும் வகையில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கைகள் வெளிப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார். 

 
பூரண மது விலக்கையோ, டாஸ்மாக் மூட வேண்டும் என்பது தொடர்பாகவோ யாரும் பேசவில்லை என்று கூறிய திருமா, இதைப் பயன்படுத்தி திமுகவை எப்படி விமர்சிப்பது என்ற நோக்கம் எதிர்க்கட்சிகளுக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்
பூமிக்கு திரும்பும் ஏவுகணை சோதனை..! ஹாட்ரிக் வெற்றி என இஸ்ரோ பெருமிதம்..!!